நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

84பார்த்தது
நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்
நடிகர் விகாரமின் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து அவர் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. வீர தீர சூரன் என்ற தலைப்பில் வெளியான அந்த டீசருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பளித்தனர். அதன் பின்னர் விக்ரம் கையில் அரிவாளுடன் போஸ்டர் ஒன்று வெளியானது. இந்நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார் என அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.