அரசு பள்ளி ஆசிரியையை கொலை வழக்கு, மாவட்ட எஸ்பி பேட்டி

73பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி பிப்ரவரி 11ஆம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த போது 2023 நவம்பர் 15ஆம் தேதி
அரசு பள்ளி
ஆசிரியர் தீபா, வெங்கடேசன் ஆகிய இருவரையும் காணவில்லை என்ற புகாரை தொடர்ந்து விசாரணையை செய்த காவல்துறையினர் , தலைமைறைவாக இருந்த ஆசரியர் வெங்கடேசனை கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைத்து, கடந்த 2மாதமாக தேடிவந்தனர். இதில் தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்படி ஆசிரியர் வெங்கடேசன் சென்னையில் இருப்பது தெரிந்து, அங்கு சென்ற தனிப்படையினர் ஆசிரியர் வெங்கடேசனை கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆசிரியர் வெங்கடேசன் ஆன்லைன் டிரேடிங் நடத்தி பணத்தை இழந்தும், ஆசிரியர் தீபாவிடம் பணம் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்ததாகவும் ஆசிரியை தீபாவை ஏமாற்றி தீபா காருடன் முருக்கன்குடி, நமையூர் வனப்பகுதியில் வைத்து சுத்தியால் அடித்து கொலை செய்து தீபாவின் உடலை தீபாவின் காரிலேயே ஏற்றிச்சென்று புதுக்கோட்டை அருகில் காட்டு பகுதியில் வைத்து பிரேதத்தை முழுவதுமாக எரித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதில் DSP சீராளன், ஆய்வாளர் பாலாஜி உதவி ஆய்வாளர்கள் மனோஜ், வினோத்கண்ணன், சங்கர், செந்தமிழ்செல்வி, சரவணக்குமார், சஞ்சீவி, சிவக்குமார், தலைமைக்காவலர் சுரேஷ், கலைமணி, ஆகியோர்களுக்கு SP பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி