பெரம்பலூர் தொகுதியில் 56 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன

2254பார்த்தது
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால்,
நேற்று ஒரே நாளில் மட்டும் 28 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மொத்தமாக 56 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இதில் பெரம்பலூர் பாரளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண்நேரு, அதிமுக வேட்பாளர் சந்திரமோகன், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி உள்ளிட்ட நான்கு பேர் மற்றும் இவர்களின் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மார்ச் - 26ம் தேதி வரை 28 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து மார்ச் 27ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுயேச்சை வேட்பாளர்களிடமிருந்து 28 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுதாக்கல் மார்ச் 27ம் தேதி மாலை 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு மொத்தம் 56 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களில் ஒரு சிலர், ஒரே நபருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி