பண்டிதர் அயோத்திதாசரின் 110- வது நினைவு தினம் அனுசரிப்பு

72பார்த்தது
பெரம்பலூரில் பண்டிதர் அயோத்திதாசரின் 110- வது நினைவு தினம்
தமிழ்ச்சங்கம் சார்பில் அனுசரிக்கப்பட்டது.

பெரம்பலூர் தமிழ் சங்கம் சார்பில் தமிழ் தேசிய தந்தை பண்டிதர் அயோத்திதாசரின் 110- வது நினைவு தினம் மே 5ம் தேதி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில், தமிழ் சங்க தலைவர் தேனரசன் தலைமையில்,
அயோத்திதாசர் படத்திற்கு மலர்மாலை அணிவித்து வீர முழக்க கோசமிட்டு, நினை தினம் அனுசரிக்கப்பட்டது.
வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் மருத்துவர் பால் நிலவன் கருத்துரை வழங்கினார், சிறப்பு அழைப்பாளராக விசிக மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசராவ் கலந்து கொண்டார்,
இதில்
தமிழ் சங்க தலைவர் தேனரசனுக்கு தமிழக அரசு சார்பில் அயோத்திதாசரின் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, பாராட்டி, தேனரசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்,
இந்நிகழ்ச்சியின் போது
தமிழ் சங்க செயலாளர் ஆசிரியர் சிலம்பரசன் வழக்கறிஞர் மணிமாறன் மாவட்ட துணை அமைப்பாளர் இயற்கை ஆர்வலர் போதி பகவன், மாவட்ட சிறுபான்மை நல உறுப்பினர் சாக்கியவர்மன், மருத்துவர் ஆனந்தகுமார், நடைபாதை வியாபாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :