பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது

4234பார்த்தது
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகுப்பாடு கிராமத்தை சேர்ந்தவர் அழகுதுரை. இவருடைய மனைவி கமலாச்சி வயது 41. இவர் வரகுபாடியில் உள்ள கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்குவதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் மதுபாலன் வயது 27 என்பவர் மது போதையில் தள்ளாடியபடி மளிகை கடைக்கு வந்தார். அங்கு கமலாச்சி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கமலாச்சி மதுபாலனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது தகாத வார்த்தைகளால் கமலாச்சி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதுபாலன் தான் வைத்திருந்த கத்தியால் கமலாச்சியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த கமலாச்சி வலியால் துடித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபாலனை கைது செய்தனர். மேலும் காயமடைந்த கமலாச்சியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி