இனி தமிழில் மீண்டும் புக்கிங் செய்யலாம்!

842பார்த்தது
இனி தமிழில் மீண்டும் புக்கிங் செய்யலாம்!
வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்வதில் பிரபலமான நிறுவனம் இன்டேன். அதில் தொலைப்பேசி வாயிலாக முன்பதிவு செய்யும்போது தமிழ் சேவைகள் துண்டிக்கப்பட்டு இந்தி சேவைகள் மட்டுமே கிடைத்தன. இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் விளக்கம் அளித்திருக்கும் IOC, ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து ஜியோ சேவைக்கு மாற்றும்போது சிறு தடங்கல் ஏற்பட்டதாகவும், அது தற்போது சரியாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளது. இன்டேன் தானியங்கி சமையல் கேஸ் பதிவு சேவையில் தமிழ் மொழி சேவை நிறுத்தப்பட்டிருந்ததற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேஷன் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தலைவருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.