வீடுகள் தோறும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சி

74பார்த்தது
வீடுகள் தோறும் அட்சதை வழங்கும் நிகழ்ச்சி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 22 ஆம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி, அயோத்தி ராமர் கோவிலில் பூஜை செய்யப்பட்ட அட்சதை, அரிசி நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முதல், 15ஆம் தேதிக்குள், அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளில், அட்சதை, ராமர் கோவில் கும்பாபிஷேக பத்திரிகை ராமர் படத்துடன் வழங்கப்படுகிறது
இதன் ஒரு பகுதியாக பந்தலுார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில், உள்ள கிராமப்புற வீடுகளில் வழங்குவதற் கான அட்சதை ராமர் கோவில் படத்துடன் கூடிய பத்திரிகை, வழங்கும் நிகழ்ச்சி துவக்கி வைக்கப் பட்டது. நெல்லியாளம் நகர பா. ஜ. , தலைவர் அண்ணா துரை, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி