4 படங்கள் ஓடிவிட்டால் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்று தற்போதுள்ள நடிகர்கள்
எண்ணுகின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை ஓபுளா படித்துறையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி, 2026 தேர்தலில் போட்டியிடும் நிலையில், அவரது கொள்கைகளையும், நிலைபாட்டையும் விமர்சித்து வருகின்றனர்.