எலச்சிபாளையம்: கல்குவாரியை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

85பார்த்தது
எலச்சிபாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோக்கலை கிராமத்தில் எளையாம்பாளையம், நெய்க்காரம்பாளையம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரியை மூட கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த வாரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இந்தப் பகுதி மக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிராம கணக்கில் குடியிருப்பு வீடுகள், பசுமை வீடு இருப்பதை மறைத்து சட்ட விரோதமாக கல் குவாரிக்கு அனுமதி அளித்ததாக் கூறி அப்போதைய வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரனைக் கண்டித்து அனுமதி அளித்ததற்கு பாராட்டு விழா என்ற பெயரில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா் மகிமைதாசனிடம் மனு அளித்தனா்.

அதில் தவறாக அளிக்கப்பட்ட உரிமத்தை ரத்துசெய்து கல்குவாரிகளை நிரந்தரமாக மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் விவசாயி பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செந்தில்குமாா், கவுன்சிலா் சுரேஷ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா்கள் வெங்கடாசலம், தேவராஜன், சுந்தரம் கலந்துகொண்டு பேசினா். லத்துவாடி ஊராட்சிமன்ற துணை தலைவா் பூசன் நன்றி கூறினாா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி