மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கொக்கூர் ஆர்ச் தெருவை சேர்ந்த சரவணன் என்பவரை கடந்த 20ஆம் ஆம் ஆண்டு பிப்.16 அன்று முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இறுதியில் மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் நீதிபதி ராஜவேலு 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.