மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தூய்மை பணியாளர்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் திரு. மா. வெங்கடேசன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.