நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதிஐஏ-ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வில் நாகப்பட்டினத்தில் 84 தேர்வு மையங்களில் 19, 315 நபர்கள் தேர்வு எழுத பதிவு செய்தவர்களில் 15491 நபர்கள் தேர்வு எழுதினர். 3824 நபர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வு சிறப்பாக நடைபெற 84 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 4 பறக்கும் படை அலுவலர்களும், 19 சுற்றுக்குழு அலுவலர்களும், 84 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வு எழுத வசதியும் மற்றும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும் ஒவ்வொரு தேர்வு கூடத்திலும் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் தனித்தனியாக பாதுகாப்பு பணியில் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு வருகை தர ஏதுவாக எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.