"மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது"

69பார்த்தது
"மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது"
மேகதாதுவில் அணை கட்ட ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி உள்ளோம் என அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார். மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலை சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன், "உச்சநீதிமன்ற தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதாந்திர அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கு எந்த ஆண்டும் கர்நாடகா தண்ணீர் வழங்கியது கிடையாது. ஆகையால், காவிரியில் தடையின்றி தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளோம்" என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி