முத்துமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம்

53பார்த்தது
மயிலாடுதுறை அடுத்த திருவிழந்தூரில் மேல ஆராயத் தெருவில் பழமை வாய்ந்த மேல முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 80 ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக விரதம் இருந்து பக்தர்கள் காவிரி கரையில் இருந்து சக்தி கரகத்துடன் புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குளியில் இறங்கி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.