சீர்காழியை அடுத்த திருவாலி, காரைமேடு, மணல்மேடு பகுதிகளில் ஓடும் திருநகரி வாய்க்காலில் தற்போது சம்பா பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் வாய்க்காலில் ஆகாயத்தாமரை அதிக அளவில் பரவி காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அவற்றை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.