மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
அதனை அடுத்து சுகாதார அலுவலகம் மற்றும் துப்புரவு ஆய்வாளர், உணவு பாதுகாப்பு அலுவலர் கொண்ட குழுக்களுடன் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து 42 கடைகள் ஆய்வு செய்யப்பட்டதில் 30 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கடைகளுக்கு 3200 அபராதம் விதித்தனார். மேலும் இது போன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கை வைத்துள்ளனர்.