தொழிலதிபர் மீது கொலை முயற்சி

69பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் பழமை மிக்க மாசிலாமணி நாதர் கோவில் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பூஜை முடியும் நேரத்தில் தரங்கம்பாடியை சேர்ந்த மாணிக்கம் மகன் தம்பா என்கிற அருண். 42. ரோட்டரி சங்கத் தலைவர், வாடகை பாத்திர கடை உரிமையாளர், ஜோசியரான இவர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றுள்ளார். கடற்கரையில் தெற்கு பார்த்த நிலையில் வீட்டிற்கும் தக்ஷிணாமூர்த்தி சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது மேலே இருந்து எரிபொருட்களை ஊற்றி மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அருணை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பொறையார் போலீசார் முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்ததா அல்லது தொழில்முறை போட்டியால் நடைபெற்றதா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்தி