எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின்

50பார்த்தது
எம்.பி., கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின்
விசா முறைகேடு வழக்கில் சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வருகிற ஜுலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் பஞ்சாபில் மின் உற்பத்தி மையத்தை சீன நிறுவனத்தின் உதவியுடன் அமைத்தது. ஆனால், அந்த பணிகள் முடியாமல் காலதாமதமானதால் சீன நிறுவனத்தின் 263 ஊழியர்களின் விசா முடிவடைந்தது. 263 ஊழியர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்று தருமாறு அந்த நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவருக்கு நெருக்கமானவருமான பாஸ்கரராமன் என்பவருக்கும் ரூ.50 லட்சம் லஞ்சமாக கொடுத்தாக சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

தொடர்புடைய செய்தி