பிரதமரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி

557பார்த்தது
பிரதமரை நாளை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி
டெல்லி செல்லும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31 வரை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமருக்கு, அமைச்சர் உதயநிதி நேரில் அழைப்பிதழ் வழங்க உள்ளார். நேற்று திருச்சியில் பன்னாட்டு விமான முனைய திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் பிரதமர் பங்கேற்ற பின் கேரளா சென்றுள்ளார்.

தொடர்புடைய செய்தி