எம்பிபிஎஸ் கலந்தாய்வு : முஸ்லிம்களுக்கு குறைவான கட் ஆஃப் என வதந்தி

70பார்த்தது
எம்பிபிஎஸ் கலந்தாய்வு : முஸ்லிம்களுக்கு குறைவான கட் ஆஃப் என வதந்தி
2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் வழங்கப்படும் 7.5% இது இட ஒதுக்கீட்டில் ஓ பி சி மாணவர்களை விட முஸ்லிம் மாணவர்களுக்கு 30 கட் ஆப் மதிப்பெண்கள் குறைவு என்றும், பட்டியல் இன மாணவர்களை விட 2 கட் ஆப் மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் என்றும் குறிப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என தமிழ்நாடு அரசு உண்மை சரிபார்க்கும் நிலை குழு தெரிவித்துள்ளது. தற்போது வரை மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கான கட் ஆப் மதிப்பெண்களை வெளியிடவில்லை. இப்படி இருக்கையில் முஸ்லீம் மாணவர்களுக்கு மட்டும் குறைவான கட் ஆப் மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டதாக வரவும் தகவல் பொய்யானது. மேற்கண்ட தகவல் வதந்தி தான் என்று தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகமும் நம்மிடம் உறுதிப்படுத்தி உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி