தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விளைச்சல்

74பார்த்தது
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விளைச்சல்
தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விளைச்சலால் விவசாயிகள் அவதி அடையும் சூழலில் நடவடிக்கை எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ”கிருஷ்ணகிரியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மா மரங்களில் 90 சதவீதம் மழைப் பொழிவை நம்பியுள்ளது. மழை இல்லாத நிலையில் ஏரிகள் தூர் வாரப்படாததால் தண்ணீர் சேமிக்கப்படவில்லை. ‘நானும் ஒரு டெல்டாகாரன்' என்று தேர்தல் நேரத்தில் வசனம் பேசினால் மட்டும் போதாது” என முதல்வரை சாடினார்.