1997ம் ஆண்டு ரூ.60 வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பன்னீர்செல்வம் (55) என்பவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடித்து வழக்கு விசாரணைகளை முடிப்பதற்காக மதுரை காவல்துறை சார்பில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் இவரை விருதுநகரில் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.