மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நேற்று முன்தினம் இரவு முன்னாள் அமைச்சர் உதயகுமார் மீது தாக்குதல் நடத்த முயன்ற போது அதிமுகவை சேர்ந்த இருவர் காயமுற்று சிகிச்சை பெற்று வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரியும், அதிமுகவினருக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் புகார் மனு அளித்த நிலையில் இந்த வழக்கில் தேனியில் பதுங்கி இருந்த அமமுக சேடபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி மற்றும் அமமுக உறுப்பினர் பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க பொதுக்குழு உறுப்பினர் ஒபிஎஸ் அணியை சேர்ந்த குபேந்திரன், அஜய் உள்ளிட்ட 4 பேரை சேடபட்டி தனிப்படை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.