மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியது.
முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் சட்டசபையில் அறிவித்தபடி கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கோவில் துணை ஆணையாளர் ரமேஷ் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச லட்டுகளை வழங்கினார். ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம் கோவில்களில் இலவச லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
மதுரையில் மட்டும் இந்து அறநிலைத்துறை சார்பாக 3 கோவில்களில் இலவச லட்டு பிரசாதம் ஆனது நாள் முழுவதும் அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.