ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது!!

70பார்த்தது
ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது!!
மதுரையில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது - அரிசி மற்றும் மினி வேன் பறிமுதல்

மதுரை ஜெய்ஹிந்துபுரம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனை செய்த போது புலிப்பாண்டி தெரு சந்திப்பில் ஜெய்ஹிந்துபுரம் நோக்கி சந்தேகப்படும் படியாக வந்த நான்கு சக்கர வாகனத்தில் தலா 30 கிலோ எடை கொண்ட 17 வெள்ளைநிற பாலீத்தின் சாக்குகளில் மொத்தம் சுமார் 510 கிலோ ரேசன் புழுங்கல் அரிசி ஏற்றி வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது

இந்த சம்பவம் தொடர்பாக உரிமையாளரான சுப்பிரமணியன், டிரைவர் முத்துஇருளாண்டி ஆகியோரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட கடத்தல் சம்மந்தமாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

மேலும் ரேஷன் அரிசிகளை கடத்தல் சந்தையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்தி