மதுரை ஒத்தக்கடையில் யானைமலை விளையாட்டு அறக்கட்டளை நிறுவனத்தின் இலச்சினை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.
இலச்சினை தமிழர் வீர விளையாட்டு அமைப்பு நிர்வாகி நீலமேகம் அறிமுகம் செய்தார். இவ்விழாவில் யானைமலை தமிழ் சங்கத்தின் நிர்வாகி தினகரன் நம்மவர் படிப்பக நிர்வாகி பிரபாகரன், செங்கதிர், சேகர், திருமங்கலம், மாரியப்பன், சுரேஷ், இளங்குமரன், கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர் ஏராளமான விளையாட்டு ஆர்வலர்கள், அறக்கட்டளையின் நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.