தீபாவளி பண்டிகை நாளில் ஆடு, கோழி இறைச்சிகளை அதிகளவிற்கு விற்பனையான நிலையில் தொடர் விடுமுறையின் கடைசி நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் மதுரை மாநகரில் உள்ள மீன் இறைச்சி சந்தைகளில் குவிந்துவருகின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி, நெல்பேட்டை, தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்சந்தைகளில் ஏராளமான பொதுமக்கள், நெய்மீன், பாறைமீன், வாலை மீன்கள் மற்றும் நண்டு, இறால் உள்ளிட்டவை ஆர்வமுடன் வாங்கிசெல்கின்றனர். நண்டு கிலோ 600 ரூபாய் முதல் இறால் கிலோ 350 முதலும் விற்பனையாகிறது.