சுவாமி வீதி உலாவின் போது நகை திருட்டு

60பார்த்தது
சுவாமி வீதி உலாவின் போது நகை திருட்டு
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்மனும் காலை - மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருவது வழக்கம்.

இதனைப் பார்க்க பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் எழுந்தருளி வீதிகளில் உலா வரும்போது சாமி தரிசனம் செய்ய வரும் பெண்களிடம் நான்கு பேர் கொண்ட பெண் கும்பல் நகை திருட்டில் ஈடுபட்டது.

அப்போது அங்கு சாமி பார்ப்பதற்காக வந்த மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த அழகர் என்பவர் சந்தேகம் அளிக்கும் வகையில் நான்கு பெண்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு அங்குள்ள காவல் துறையினரிடம் தகவல் கொடுத்தனர்.

அந்த நான்கு பெண்களையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்களிடம் நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும் இவர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி, சுகுணா, ராசமணி, உமா என்பது தெரிய வந்தது எனவே இந்த நான்கு பெண்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 6 பவுன் நகையை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி