சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய கழிவறையில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, விமான நிலையம் முழுவதும் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.