தங்க பதக்கங்களை குவித்த மாதவனின் மகன்!

1437பார்த்தது
தங்க பதக்கங்களை குவித்த மாதவனின் மகன்!
பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று வருகிறார். அதன்படி, தற்போது மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் ஐந்து பிரிவுகளில் பங்கேற்று 5 பதக்கங்களை வென்றுள்ளார். இது குறித்து நடிகர் மாதவன் தனது ட்வீட்டர் பக்கத்தில், “கடவுளின் கிருபையுடனும், உங்களின் வாழ்த்துக்களுடனும் வேதாந்த் இந்தியாவுக்காக ஐந்து தங்கப் பதக்கங்களை 2 PB உடன் 2023 மலேசிய சாம்பியன்ஷிப்பில், இந்த வார இறுதியில் கோலாலம்பூரில் வென்றார். மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.