லியோ படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு

173பார்த்தது
லியோ படத்தின் 3வது பாடல் நாளை வெளியீடு
'லியோ' படத்தின் 3வது பாடல் நாளை வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. சமீபத்தில் பேசிய நேர்காணல் ஒன்றில், "லியோ படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இருக்கிறது எனவும், "அன்பு எனும் ஆயுதம்" என்ற பாடல் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது" எனவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். அதை உறுதிசெய்த படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு, நாளை பாடல் வெளியாகும் என ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.