லால் சலாம் டீசர் வெளியானது

350பார்த்தது
லால் சலாம் டீசர் வெளியானது
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளுக்கு இடையே நடைபெறும் மோதலை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், லால் சலாம் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ரஜினியின் அதிரடி சண்டைக்காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.