கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் மலையாண்டஅள்ளி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் குபேந்திரன் தலைமை ஏற்று கொடி ஏற்றினார். இந்த நிகழ்வில் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ம. சங்கத்தமிழன் பங்கேடுத்து சிறப்புரை ஆற்றினார். உடன் தொழிலதிபர் பழனிச்சாமி மற்றும் கட்சியின் மாவட்ட மாநில ஒன்றிய நகர முகாம் பொறுப்பாளர்கள், கிராம பொதுமக்கள் என திரளானோர் பங்கேடுத்து சிறப்பித்தனர்.