ஓசூர் நகரின் தந்தையான கே. அப்பாவு பிள்ளை அவர்களின் குமாரன், ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் எம் எல் ஏ. ஐ. என். டி. யு. சியின் மூத்த தலைவர் மூத்த அரசியல்வாதி கே. ஏ மனோகரன் அவர்கள் இன்று தனது 73வது பிறந்த நாளை கொண்டாடினார். முன்னதாக அவர் ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் உள்ள தனது தாய் தந்தை நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
அதனைத் தொடர்ந்து கே ஏ பி திருமண மண்டபம் அருகே பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர்கள் ஆகியோர் முன்பு கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் பிறந்த நாளை ஒட்டி ஏழை எளிய மக்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னாள் எம்எல்ஏ பிறந்தநாளை ஒட்டி அவருக்கு ஓசூர் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பத்திரிக்கையாளர்கள் தொழிலாளர்கள் வர்த்தகர்கள் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் என ஏராளமான சால்வைகள் மலர் மாலைகள் அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து விடுகின்றனர்அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்