கொச்சியில் இருந்து மூணாறுக்கு கடல் விமான சுற்றுலா சேவை துவங்கப்பட உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் இன்று கொச்சியில் இருந்து மாட்டுப்பட்டி வரை நடந்தது. கொச்சியில் புறப்பட்ட கடல் விமானம் காலை 11 மணிக்கு மாட்டுப்பட்டி அணையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் இலக்கை அடைய அரை மணி நேரம் ஆனது. சாலை மார்க்கமாக பயணம் செய்ய குறைந்தது 5 மணி நேரமாகும். கடல் விமானம் தரையிறங்குவதற்கு 2 மீட்டர் ஆழமும், 800 மீட்டர் நீர் ஓடு பாதை மட்டுமே தேவை.