ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர்

81பார்த்தது
ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர்
டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக கேரள அரசு அறிவித்ததையடுத்து, தமிழக முதல்வர் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். டெல்லியில் கேரளா நடத்த உள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்கு ஸ்டாலினுக்கு சல்யூட் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜனநாயகம், அரசியலமைப்பு விழுமியங்களை பாதுகாக்க ஒன்றாக பயணிப்போம் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி