பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனீஸ்வரர் திருக்கோவிலானது காசிக்கு அடுத்து வடக்கு நோக்கி அமையப்பெற்ற மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவானது 8 ஊர் சாமிகள் ஒன்று கூடி கடம்பன்துறை காவிரி ஆற்றில் நீராடி தீர்த்தவாரி மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்த நிலையில் கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருவதால் தைப்பூச திருவிழா நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாநில மகளிர் அணி துணைத் தலைவர் மீனா வினோத்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட தலைவர், பாராளுமன்ற பொறுப்பாளர் செந்தில்நாதன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜாளி செல்வம், குளித்தலை நகரத் தலைவர் கணேசன், குளித்தலை ஒன்றிய தலைவர் பொன். ரஞ்சித் குமார், தோகைமலை கிழக்கு ஒன்றிய தலைவர் ராஜா பிரதீப், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் சாமிதுரை மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி