சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி இன்று(மார்ச் 4) துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற உள்ளது. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதி போட்டிகளில் மோத உள்ள நிலையில் முதல் அரையிறுதி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.