கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கூடலூர் ஊராட்சி சங்க கவுண்டம்பட்டியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலை கடையை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் நேற்று (செப்.,12) திறந்து வைத்தார். இதில் திட்ட அலுவலர் சத்தியா, திமுக முன்னாள் எம்எல்ஏ ராமர், தோகைமலை சேர்மன் சுகந்தி சசிகுமார், கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலம் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.