கரூர் மாவட்டம் குளித்தலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (செப்.,15) காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. நான்கு கால யாக வேள்வி பூஜை நிறைவடைந்ததும் புனித நீர் அடங்கிய கும்பத்தினை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் மேல் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி தீபாரதனை காண்பித்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீர் பெற்று தரிசனம் செய்தனர்.