பாம்பு கடித்து உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்

61பார்த்தது
பாம்பு கடித்து உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே போத்த ராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் இளங்கோவன் (60). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி அன்று தனது வயலில் மாட்டிற்கு தீவனம் அறுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இளங்கோவனை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் உயிரிழந்தார். இது குறித்து அவரின் மகன் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் நேற்று வழக்குப்பதிவு.

டேக்ஸ் :