கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மலையப்ப நகரை சேர்ந்தவர் கௌசல்யா (31), இவர் கடந்த 8 ஆம் தேதி அன்று தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாயனூர் செல்லாண்டியம்மன் கோயிலுக்கு சென்று வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி கும்பிட சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த ஸ்பிளெண்டர் பைக் வாகனம் காணவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கிடைக்காததால் கௌசல்யா அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் நேற்று (அக்.,11) வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.