கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா வீரியப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வைரமணி (45). கூலி தொழிலாளியான இவர் இன்று (செப் 22) இரவு பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து தனது டிவிஎஸ் வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சாலையின் ஓரத்தில் இருந்த போர் வாட்டர் மோட்டார் அறை மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வைரமணி உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.