கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே கருப்பத்தூரில் புகழ்பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் தமிழகத்தில் ஐயப்பனுக்காக கட்டப்பட்ட முதல் கோவில் ஆகும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்தியை ஒன்றாம் தேதி ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்.
இன்று காலை குளித்தலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், நங்கவரம், பழைய ஜெயங்கொண்டம், அய்யர்மலை மற்றும் முசிறி, தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3000க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கருப்புத்தூர் காவிரி ஆற்றில் புனித நீராடி கருப்பு வேஷ்டி அணிந்து நீண்ட வரிசையில் நின்று குருசாமி, குருக்கள் கைகளால் மாலை அணிந்து தங்களது விரதத்தை துவங்கினர்.
சுமார் 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் முழங்க மாலை அணிந்து கொண்டனர்.
முதல்முறையாக சபரிமலைக்கு விரதம் மேற்கொண்டு செல்லும் கன்னி சாமிகளும் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.
மாலை அணிந்து விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு ஐயப்பன் ஆன்மீக அன்னதான பிரசாத அறக்கட்டளை சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.