கரூர்: சிஏஏ சட்டத்தை கைவிடக் கோரி விசிகவினர் ஆர்ப்பாட்டம்

1058பார்த்தது
கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு விசிக சார்பில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் 2024 எனும் சட்டத்தை மார்ச் 11-ம் தேதி அமலுக்கு கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து, கரூர் மாவட்ட விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மார்ச் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் விசிக கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கரூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அவிநாசி வரவேற்புரை நிகழ்த்தினார். விசிக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் என்கிற ஆற்றலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், விசிக கரூர் மேலிட பொறுப்பாளர் வேலுசாமி என்கிற தமிழ்வேந்தன், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு பொறுப்பாளர் பாவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, ஒன்றிய பாஜக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள, சிஏஏ சட்டம், சிறுபான்மையின மக்களுக்கும் தமிழர்களுக்கும் எவ்வாறு எதிராக உள்ளது என்பதை விளக்கிப் பேசினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி