கரூரில் தொடர்ந்து மூன்று நாட்களாக அன்னதானம் நடைபெற்று வருகிறது

1917பார்த்தது
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதி புரம் பகுதியில் வேம்பு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம், நேற்று மற்றும் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து காலை, மதியம் மற்றும் இரவு வேளைகளில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகள் அனைவரும் அன்னதான பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தனர். இதனை கரூர் மாநகராட்சி இருபத்தி மூன்றாவது மாமன்ற உறுப்பினர் வளர்மதிசம்பத்குமார், ஆறுமுகம், கேபிள் சிவா, பாஸ்கர், பி. குமார், சம்பத்குமார் ஆகிய நிர்வாகிகள் வெகு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி