புரவி பாளையத்தில் டூவீலரில் வேகமாக சென்றதால் விபத்து.

1909பார்த்தது
புரவி பாளையத்தில் டூவீலரில் வேகமாக சென்றதால் விபத்து. ஒருவர் படுகாயம்.


கரூர் மாவட்டம், பசுபதி பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட, புலியூர், புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன் வயது 51.

இவர் மார்ச் 13ஆம் தேதி மாலை 6: 30- மணி அளவில், புலியூரிலிருந்து புரவிபாளையம் செல்வதற்காக அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.


இவரது வாகனம் புரவிபாளையத்தில் அவரது வீட்டின் அருகே சென்ற போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நெடுஞ்செழியனுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக நெடுஞ்செழியன் மனைவி மகேஸ்வரி வயது 46 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்பட காரணமான நெடுஞ்செழியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி