அரவக்குறிச்சி சிமெண்ட் லோடு உடன் சென்ற லாரி திடீரென பற்றி எரிந்ததால் பதட்டம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மோனச்சன் வயது 58. இவர் டிஎன் 61 எம் 6347 என்ற எண் கொண்ட டாரஸ் லாரியில், திண்டுக்கல் மாவட்டம்,
கரிக்காலியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் பாலக்காடு செல்வதற்காக அரவக்குறிச்சி- பாளையம் செல்லும் சாலையில் வளையப்பட்டி பிரிவு அருகே நேற்று இரவு சென்றபோது, திடீரென லாரி தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த மோனச்சன் லாரியை விட்டு கீழே இறங்கினார்.
மேலும், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரவக்குறிச்சி காவல் துறையினர், தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.
ஆயினும் லாரி முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது.
தெய்வாதீனமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இன்றி தப்பினர்.
சம்பவம் குறித்து அரவக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.