மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையம் ஆய்வு

559பார்த்தது
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை ஆய்வு செய்தார் ஆட்சியர் தங்கவேல்.


கரூர் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், கரூர் மாவட்டம், தளவாய்பாளையம் பகுதியில் செயல்படும் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான அறையில் இருப்பு வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் கண்காணிக்க, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கரூர் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள "ஸ்டராங் ரூம்" என்னும் அறைக்கு சென்று, முறையாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறதா? என்பதை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.