கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3பேர் கைது. ரூ. 2800 கஞ்சா பறிமுதல்.

62பார்த்தது
அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது. ரூபாய் 2, 800 மதிப்புள்ள 280 கிராம் கஞ்சா பறிமுதல்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடப்பது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கரூர் மாவட்டம்
க. பரமத்தி, தண்ணீர் பந்தல் பிரிவு அருகே பெண் காவல் உதவி ஆய்வாளர் ரம்யா செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10 மணி அளவில் சோதனை மேற்கொண்டார்.

அப்போது அவ்வழியாக வந்த, புகலூர் தாலுக்கா, விசுவநாதபுரி, மேல தெருவை சேர்ந்த ராமச்சந்திரனை இடைமறித்து, ரூ. 800 மதிப்புள்ள 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆனூர் பெட்ரோல் பங்க் அருகே சோதனை மேற்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் அழகுராம், தும்பிவாடி அருகே புரவிபாளையத்தை சேர்ந்த நெப்போலியன் வயது 26 என்பவரை இடைமறித்து சோதனை இட்டபோது,
ரூ. 1000 மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

இதே போல, காவல் உதவி ஆய்வாளர் மகாமுனி குளத்தூர் பஸ் ஸ்டாப் அருகே சோதனை மேற்கொண்ட போது, அவ்வழியாக வந்த புரவிபாளையத்தை சேர்ந்த மைசூர் ராமன் வயது 55 என்பவரிடமிருந்தும்
ரூ. 1000-மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

3-பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.

டேக்ஸ் :